ஆக்ஷனில் தெறிக்கவிடும் சமந்தா! வெளியானது 'சிட்டாடல்: ஹனி பன்னி' படத்தின் அதிரடி டிரெய்லர்!

 ராஜ் மற்றும் டிகே இயக்கத்தில் சமந்தா நடித்துள்ள வெப் தொடரான சிட்டாடல்: ஹனி பன்னி படத்தின் அதிரடி ஆக்ஷன் ட்ரைலர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
 

manimegalai a  | Published: Oct 15, 2024, 4:04 PM IST

பிரைம் வீடியோவில் வெளியாக உள்ள... சிட்டாடல்: ஹனி பன்னி படத்தில்,  வருண் தவான் மற்றும் சமந்தா ஆகியோர் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.  சிட்டாடல் தொடரை அமேசான் எம்ஜிஎம் ஸ்டுடியோஸ் மற்றும் ரூசோ பிரதர்ஸின் ஏஜிபிஓ நிறுவனம் இணைந்து தயாரித்துள்ளன.

நவம்பர் 7 ஆம் தேதி பிரைம் வீடியோவில் பிரத்தியேகமாக இந்தியாவிலும், உலகம் முழுவதும் 240க்கும் மேற்பட்ட நாடுகள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் இந்த படம் திரையிடப்பட உள்ளது. இதில் சமந்தா ஒரு குழந்தைக்கு அம்மாவாக நடித்துள்ளார். அதே போல் ஒவ்வொரு ஆக்ஷன் காட்சியிலும் சமந்தா மிரட்டியுள்ளார். இந்த ட்ரைலர் தற்போது வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. 
 

Read More...

Video Top Stories