லவ் டுடே பாணியில் மற்றுமொரு படம்.. தட்டி தூக்கிய ரெட் ஜெயண்ட்! டீசரை பார்த்து எப்புட்ரா என வியக்கும் ரசிகர்கள்

கணேஷ் பாபு இயக்கத்தில் பிக்பாஸ் கவின் நாயகனாக நடித்துள்ள டாடா திரைப்படத்தை ரெட் ஜெயண்ட் மூவீஸ் நிறுவனம் தான் வெளியிடுகிறது. இப்படத்தின் டீசர் வெளியாகி உள்ளது.

First Published Jan 8, 2023, 5:22 PM IST | Last Updated Jan 8, 2023, 5:22 PM IST

உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவீஸ் நிறுவனம் வெளியீட்டில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் ரிலீசான லவ் டுடே படம் பிளாக்பஸ்டர் ஹிட் ஆனது. சின்ன பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட அப்படம் பாக்ஸ் ஆபிஸில் கிட்டத்தட்ட ரூ.100 கோடி வரை வசூலை ஈட்டி சாதனை படைத்தது. இதனால் சிறு பட்ஜெட் படங்கள் பக்கம் ரெட் ஜெயண்ட் தற்போது கவனம் செலுத்தி வருகிறது.

அந்த வகையில் லவ் டுடே பாணியில் சின்ன பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட மற்றுமொரு படத்தின் ரிலீஸ் உரிமையை அந்நிறுவனம் தட்டித்தூக்கி உள்ளது. டாடா என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை புதுமுக இயக்குனர் கணேஷ் கே பாபு இயக்கி உள்ளார். பிக்பாஸ் பிரபலம் கவின் தன் இப்படத்தில் ஹீரோவாக நடித்துள்ளார்.

கவினுக்கு ஜோடியாக மலையாள நடிகை அபர்ணா தாஸ் நடித்துள்ளார். இவர் விஜய்யின் பீஸ்ட் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தவர் ஆவார். காதல், காமெடி கலந்த ரொமாண்டிக் திரைப்படமாக டாடா உருவாகி உள்ளது. இப்படத்தின் டீசர் வெளியாகி சோசியல் மீடியாவில் செம்ம வைரலாகி வருகிறது. டாடா திரைப்படம் வருகிற ஜனவரி 26-ந் தேதி ரிலீசாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

Video Top Stories