ராமர் பாலம் பற்றிய படம்... சர்ச்சையில் சிக்குமா ‘ராம் சேது’? - வைரலாகும் டிரைலர் இதோ

ராம் சேது திரைப்படம் தமிழில் ராமர் பாலம் என்கிற பெயரில் டப்பிங் செய்யப்பட்டு வருகிற அக்டோபர் 25-ந் தேதி தீபாவளி பண்டிகையையொட்டி ரிலீசாக உள்ளது.

First Published Oct 12, 2022, 11:28 AM IST | Last Updated Oct 12, 2022, 11:28 AM IST

பாலிவுட்டில் முன்னணி நடிகராக வலம் வருபவர் அக்‌ஷய் குமார். இவர் நடிப்பில் இந்த ஆண்டு ரிலீசான படங்கள் அனைத்தும் படு தோல்வியை சந்தித்தன. இதனால் அவரது மார்க்கெட்டும் கடும் வீழ்ச்சியை சந்தித்துள்ளது. இதையடுத்து அவர் நடிப்பில் உருவாகி உள்ள படம் ராம் சேது. இப்படத்தின் மூலம் அவர் கம்பேக் கொடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஏனெனில் இதில் 7000 வருடத்திற்கு முன் ராமரால் கடலுக்கு நடுவே கட்டப்பட்டதாக கூறப்படும் ராமர் பாலத்தை பற்றி தான் இப்படத்தை எடுத்துள்ளனர். அந்த பாலத்தை தேடிச் செல்லும் அக்‌ஷய் குமார் அதில் வெற்றிகண்டாரா என்பது தான் இப்படத்தின் மையக்கரு. அபிஷேக் சர்மா இயக்கியுள்ள இப்படத்தில் அக்‌ஷய் குமாருக்கு ஜோடியாக ஜாக்குலின் பெர்னாண்டஸ் நடித்துள்ளார்.

ராம் சேது திரைப்படம் தமிழில் ராமர் பாலம் என்கிற பெயரில் டப்பிங் செய்யப்பட்டு வெளியாக உள்ளது. வருகிற அக்டோபர் 25-ந் தேதி தீபாவளி பண்டிகையையொட்டி ரிலீசாக உள்ள இப்படத்தின் டிரைலர் தற்போது வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இப்படம் ரிலீசான பின்னர் பல்வேறு சர்ச்சைகளில் சிக்க வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.

இதையும் படியுங்கள்... ஹிஜாப்புக்கு எதிர்ப்பு... ஆடைகளை கழற்றி வீசி அரை நிர்வாணமாக வீடியோ வெளியிட்ட நடிகை

Video Top Stories