அவனுங்கள அடிக்கனுன்னா வாழ்வாதாரத்துல கை வைக்கணும்! 'பராரி' டீசர் - வீடியோ!

இயக்குனர் ராஜு முருகனின், உதவி இயக்குனர் எழில் பெரியவேடி இயக்கத்தில் உருவாகியுள்ள 'பராரி' திரைப்படத்தின் டீசர் வெளியாகி அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.
 

Share this Video

தமிழில் குக்கூ, ஜோக்கர், போன்ற தனித்துவமான கதைகளை இயக்கி பிரபலமான இயக்குனர் ராஜு முருகனிடம் உதவிய இயக்குனராக பணியாற்றிய எழில் பெரியவேடி... தாழ்த்தப்பட்ட மக்களின் அவலங்களை தோலுரித்து கூறியுள்ள திரைப்படம் 'பராரி'. இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியான போதே ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றதை தொடர்ந்து தற்போது இந்த படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.

'பராரி' என்பதை, சொந்த மண்ணை விட்டுவிட்டு... பிழைப்புக்காக வேறு இடத்திற்கு செல்லும் மக்களை குறிக்கும் சொல். இந்த படத்திலும், சொந்த மண் இருந்தும்... தங்களின் உரிமைக்காக போராடும் மக்களின் வாழ்க்கையை கண் முன் காட்டியுள்ளார் இயக்குனர். சமீப காலமாக தாழ்த்தப்பட்ட மக்களை பற்றி பேசும் படங்கள் அதிகமாக எடுக்கப்பட்டு வரும் நிலையில், இதுவும் அப்படி பட்ட ஒரு படமாக உள்ளது டீஸரின் மூலம் தெரிகிறது.

ராஜு முருகன் வழங்கும் இந்த படத்தை காலா ஃபிலிம் பிரைவேட் லிமிடெட் சார்பில் ஹரி ஷங்கர் என்பவர் தயாரித்துள்ளார். ஷான் ரோல்டன் இசையமைக்க இந்த படத்திற்கு சாம் RDX படத்தொகுப்பு செய்துள்ளார். ஸ்ரீதர் ஒளிப்பதிவு செய்துள்ளார். என்பது குறிப்பிடத்தக்கது.

Related Video