‘குழந்தைகள் மனசுல விஷத்தை விதைச்சுருக்கீங்க’ ரஜினிகாந்த் மிரட்டும் லால் சலாம் டீசர் வெளியீடு.!!

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கியுள்ள படம் லால் சலாம். இந்த திரைப்படத்தில் நடிகர் ரஜினிகாந்த் கவுரவ தோற்றத்தில் நடித்துள்ளார். இதன் டீசர் வெளியாகி உள்ளது.

Raghupati R  | Published: Nov 12, 2023, 9:31 PM IST

நடிகர் ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கியுள்ள படம், லால் சலாம். இப்படத்தில் மொய்தீன் பாய் என்ற கதாபாத்திரத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் கவுரவ வேடத்தில் நடித்துள்ளார். மேலும் இப்படத்தில் விக்ராந்த், விஷ்ணு விஷால் இருவரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்தப் படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். லைகா நிறுவனம் சார்பில் சுபாஷ்கரன் படத்தை தயாரித்துள்ளார். ரெட் ஜெயன்ட் நிறுவனம் தமிழகத்தில் படத்தை வெளியிடும் உரிமையை பெற்றிருக்கிறது. 

தீபாவளியையொட்டி இப்படத்தின் டீசர் இன்று வெளியிடப்பட்டுள்ளது. கிரிக்கெட்டை மையமாக வைத்து உருவாகியுள்ள லால் சலாம் திரைப்படம் வரும் பொங்கல் பண்டிகையொட்டி ரிலீஸாகிறது. டீஸரில், விக்ராந்த், விஷ்ணு விஷால் தலைமையிலான இரண்டு அணிகளுக்கு இடையே நடக்கும் கிரிக்கெட் போட்டி மத மோதலாக மாறுகிறது.  இதனால் பெரும் கலவரம் வெடிக்கிறது. இந்த டீசரில் தம்பி ராமையா, கே.எஸ்.ரவிக்குமார், செந்தில் ஆகியோரும் இடம்பெற்றிருக்கிறார்கள்.

குறைந்த கட்டணத்தில் திருப்பதியை சுற்றி பார்க்க முடியும்.. ஐஆர்சிடிசி டூர் பேக்கேஜ் விலை இவ்வளவு தானா

Read More...

Video Top Stories