Petta Rap : பாட்டு.. அடி... ஆட்டம்.. ரிப்பீட்டு என அலப்பறை கிளப்பும் பிரபுதேவா - டிரெண்டாகும் பேட்ட ராப் டீசர்

பிரபுதேவா, வேதிகா நடிப்பில் உருவாகி இருக்கும் பேட்ட ராப் திரைப்படத்தின் டீசர் ரிலீஸ் ஆகி ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்று வருகிறது.

Ganesh A  | Published: Jun 22, 2024, 2:25 PM IST

இந்தியாவின் மைக்கெல் ஜாக்சன் என புகழ்ப்படுபவர் பிரபுதேவா. இவர் நடன இயக்குனராக மட்டுமின்றி சினிமாவில் ஹீரோ, இயக்குனர் என பன்முகத்திறமை வாய்ந்தவராக வலம் வருகிறார். பிரபுதேவா நடிப்பில் தற்போது கோட் திரைப்படம் உருவாகி வருகிறது. இப்படத்தில் விஜய்யுடன் நடித்துள்ளார் பிரபுதேவா. இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து ரிலீசுக்கு தயாராகி வருகிறது. இந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 5ந் தேதி கோட் திரைப்படம் ரிலீஸ் ஆக உள்ளது.

கோட் படத்தை தொடர்ந்து தொடர்ந்து பிரபுதேவா ஹீரோவாக நடித்து வரும் திரைப்படம் பேட்ட ராப். இப்படத்தை எஸ்.ஜே.சினு இயக்குகிறார். இதில் பிரபுதேவாவுக்கு ஜோடியாக நடிகை வேதிகா நடித்துள்ளார். இப்படத்தில் விவேக் பிரசன்னா, பகவதி பெருமாள், ரமேஷ் திலக், மைம் கோபி, ரியாஸ் கான் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது.

பேட்ட ராப் திரைப்படத்திற்கு டி இமான் இசையமைத்து உள்ளார். ஜித்து தாமோதர் ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்துக்கு நிஷாத் யூசுப் படத்தொகுப்பாளராக பணியாற்றி உள்ளார். இப்படத்தின் டீசர் தற்போது வெளியாகி இருக்கிறது. அதில் பாட்டு, அடி, ஆட்டம், ரிப்பீட்டு என பிரபுதேவா கலக்கி இருக்கிறார். அந்த டீசர் இணையத்தில் வைரலாகி வருகிறது

Read More...

Video Top Stories