Kalki 2898 AD : அடையாளமே தெரியாமல் மாறிய கமல்! ஹாலிவுட் தரத்தில் பிரபாஸ் கலக்கும் 'கல்கி 2898' பட ட்ரைலர்

இந்திய ரசிகர்கள் பேராவலோடு எதிர்பார்த்துக் காத்துக்கொண்டிருக்கும் கல்கி 2898 படத்தின் டிரெய்லர் சற்று முன் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. 
 

manimegalai a  | Updated: Jun 10, 2024, 9:13 PM IST

பிரபாஸ் கதாநாயகனாக நடிக்க, இயக்குனர் நாக் அஷ்வின் இயக்கியுள்ள 'கல்கி 2898' படத்தின் ட்ரைலர் தற்போது வெளியாகியுள்ளது. இந்த படத்தில் முக்கிய வேடத்தில் அமிதாப் பச்சன், கமல்ஹாசன், பிரபாஸ், தீபிகா படுகோன், திஷா பதானி, உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

“கல்கி 2898 கிபி” சயின்ஸ் பிக்சன் படத்தின் அதிரடியான டிரெய்லர் ஜூன் 10- ஆம் தேதி அதாவது இன்று மாலை வெளியாகும் என கூறப்பட்டிருந்த நிலையில், சற்று முன் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. வைஜெயந்தி மூவிஸ் தயாரித்துள்ள இப்படம் 2024 ஜூன் 27ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

Video Top Stories