Asianet News TamilAsianet News Tamil

Pathaan Trailer : வாரிசு ரிலீஸ் சமயத்தில் ஷாருக்கானின் பதான் பட டிரைலரை வெளியிட்டு சர்ப்ரைஸ் கொடுத்த விஜய்

சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் ஷாருக்கான், தீபிகா படுகோனே, ஜான் ஆபிரஹாம் நடிப்பில் உருவாகி உள்ள பதான் படத்தின் டிரைலர் வெளியாகி உள்ளது.

First Published Jan 10, 2023, 11:44 AM IST | Last Updated Jan 10, 2023, 12:19 PM IST

பாலிவுட் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் ஷாருக்கான். இவர் நடிப்பில் தற்போது உருவாகி உள்ள படம் பதான். சித்தார்த் ஆனந்த் இயக்கியுள்ள இப்படத்தில் ஷாருக்கானுக்கு ஜோடியாக தீபிகா படுகோனே நடித்துள்ளார். இப்படத்தில் பிரபல பாலிவுட் நடிகர் ஜான் ஆபிரஹாம் வில்லனாக நடித்திருக்கிறார்.

பதான் படத்திலிருந்து ஏற்கனவே வெளியான பாடல்காட்சி மாபெரும் சர்ச்சையில் சிக்கியது. அதில் நடிகை தீபிகா படுகோனே காவி நிறத்தில் பிகினி உடை அணிந்து நடனமாடியதற்கு இந்து அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்ததோடு, இப்படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும் என்றும் குரல் கொடுத்து வந்தனர்.

அந்த சர்ச்சைகள் இன்னும் ஓயாத நிலையில் தற்போது பதான் படத்தின் டிரைலர் வெளியாகி உள்ளது. இப்படத்தின் தமிழ் டிரைலரை நடிகர் விஜய் வெளியிட்டுள்ளார். ஹாலிவுட் ரேஞ்சுக்கு மிரட்டலான ஆக்‌ஷன் காட்சிகளுடன் கூடிய அந்த டிரைலருக்கு ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பு கிடைத்து வருகிறது. பதான் திரைப்படம் வருகிற ஜனவரி 26-ந் தேதி தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் ரிலீசாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

Video Top Stories