பிராமின் பெண்ணாக நயன்தாரா.. பிஸ்னஸ் புத்தகத்தில் சிக்கென் ரெசிபி நோட்ஸ்! அன்னபூரணி டீஸர் வெளியானது!

நயன்தாராவின் 75வது படமான 'அன்னபூரணி' படத்தின் டீசர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
 

Share this Video

லேடி சூப்பர் ஸ்டார், நடிகை நயன்தாரா நடிப்பில் சமீபத்தில் வெளியான 'ஜவான்' திரைப்படம் 1200 கோடிக்கு மேல் வசூல் சாதனை செய்த நிலையில், இந்த படத்திற்கு பின்னர் நயன்தாரா தன்னுடைய 75-ஆவது படத்தில் கவனம் செலுத்தி வருகிறார்.

திருச்சியில் உள்ள ஸ்ரீ ரங்கத்தில் பிராமண வீட்டில் பிறகும் அண்ணா பூரணி... கையில் பிஸ்னஸ் லாஜிஸ்டிக் புத்தகத்தின் நடுவே சிக்கன் ரெசிபியை வைத்து கொண்டு நோட்ஸ் எடுத்து வருகிறார். மேலும் இந்த படம் சமையல் கலையை மையமாக வைத்து வைக்கப்பட உள்ளது என்பது இந்த டீசர் மூலமே தெரிந்து கொள்ள முடிகிறது.

நயன்தாராவின் 75வது படமாக உருவாகும் இப்படம், கண்டிப்பாக நயன்தாரா திரையுலக வாழ்க்கையில் பெஸ்ட்டாக இருக்கும் என ரசிகர்கள் கூறி வருகிறார்கள். இந்த படத்தை இயக்குனர் நீலேஷ் கிருஷ்ணா இயக்குகிறார். மேலும் இந்த படத்தில் ஜெய், சத்யராஜ், கே.எஸ்.ரவிக்குமார், ரெடின் கிங்ஸ்லி, குமாரி சச்சு, கார்த்திக் குமார், மற்றும் சுரேஷ் சக்ரவர்த்தி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். தமன் இப்படத்திற்கு இசையமைக்க, சத்யன் சூரியன் ஒளிப்பதிவு செய்கிறார். பிரவீன் ஆண்டனி இப்படத்திற்கு படத்தொகுப்பு செய்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
.

Related Video