நானியுடன் லிப்லாக் முத்தமழை பொழியும் மிருணாள் தாக்கூர் - வைரலாகும் ‘ஹாய் நான்னா’ டீசர்

நானி, மிருணாள் தாக்கூர் நடிப்பில் உருவாகி உள்ள ஹாய் நான்னா படத்தின் டீசர் வெளியாகி வைரலாகி வருகிறது.

Share this Video

நேச்சுரல் ஸ்டார் நானி நடிப்பில் உருவாகி உள்ள திரைப்படம் ஹாய் நான்னா. தந்தை - மகள் உறவை மையமாக வைத்து உருவாகி உள்ள இப்படத்தை ஷெளர்யுவ் இயக்கி இருக்கிறார். இப்படத்தில் நானியின் மகள் கதாபாத்திரத்தில் கியாரா நடித்திருக்கிறார். மேலும் சீதா ராமம் படத்தின் நாயகி மிருணாள் தாக்கூர் இப்படத்தில் நடிகர் நானிக்கு ஜோடியாக நடித்துள்ளார்.

ஹாய் நான்னா படத்தின் பாடல்கள் ஏற்கனவே வெளியாகி வரவேற்பை பெற்ற நிலையில், தற்போது அப்படத்தின் டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது. தந்தை மகள் பாசத்தோடு ஆரம்பிக்கும் இந்த டீசரில் போகப்போக மிருணாள் தாக்கூர் - நானி இடையேயான முத்த மழையோடு செல்கிறது. அதுவும் இருவரும் பார்க்கும்போதெல்லாம் லிப்லாக் கிஸ் அடித்துக் கொள்கிறார்கள். இப்படம் வருகிற டிசம்பர் மாதம் திரைக்கு வர உள்ளது.

Related Video