ரட்சகன் நாகர்ஜுனாவின் பான் இந்தியா படம் ‘இரட்சன் : தி கோஸ்ட்’... வைரலாகும் டிரைலர் இதோ

தெலுங்கில் முன்னணி நடிகராக வலம் வரும் நாகார்ஜுனா நடிப்பில் தயாராகி உள்ள ‘இரட்சன் : தி கோஸ்ட்’ படத்தின் டிரைலர் வெளியாகி வைரலாகி வருகிறது.

Ganesh A  | Published: Oct 3, 2022, 3:00 PM IST

தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் நாகர்ஜுனா நடிப்பில் தற்போது உருவாகி உள்ள படம் ‘இரட்சன் : தி கோஸ்ட்’. இப்படத்தை பிரவீன் சட்டாரு இயக்கி உள்ளார். இப்படத்தில் நாகர்ஜுனாவுடன் சோனல் சவுகான், அனிகா சுரேந்திரன், மனிஷ் சவுத்ரி, ரவி வர்மா, ஸ்ரீகாந்த் ஐய்யனார் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது.

பரத் மற்றும் சவுரப் இசையமைத்துள்ள இப்படத்திற்கு முகேஷ் ஒளிப்பதிவு செய்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து ரிலீசுக்கு தயாராகி வருகிறது. வருகிற அக்டோபர் 5-ந் தேதி இப்படம் ரிலீசாக உள்ளது. தெலுங்கு படமான இது தமிழில் டப்பிங் செய்து வெளியிடப்பட உள்ளது. இப்படத்தின் டிரைலர் தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது.

Read More...

Video Top Stories