பாரதிராஜா இயக்க... இளையராஜா இசையமைத்த ‘மாடர்ன் லவ் சென்னை’ வெப் தொடரின் டிரைலர் இதோ

பாரதிராஜா உள்பட 6 வெவ்வேறு இயக்குனர்கள் இயக்கிய மாடர்ன் லவ் சென்னை வெப் தொடரின் டிரைலர் வெளியாகி வைரலாகி வருகிறது.

Share this Video

மாடர்ன் லவ் வெப் தொடர் வருகிற மே 18-ந் தேதி ரிலீஸ் ஆக உள்ளது. இந்த ஆந்தாலஜி வெப் தொடர் ஆறு அத்தியாயங்களை கொண்டுள்ளது. இதில் முதல் அத்தியாயமான ‘லாலா குண்டா பொம்மைகள்’ என்பதை ராஜு முருகன் இயக்கி உள்ளார். அதேபோல் இரண்டாவது அத்தியாயமான ‘இமைகள்’ என்கிற தொடரை பாலாஜி சக்திவேல் இயக்கி உள்ளார்.

மூன்றாவது அத்தியாயமான ‘காதல் என்பது கண்ணுல ஹார்ட் இருக்குற எமோஜி’ யை கிருஷ்ணகுமார் ராம்குமார் இயக்கி இருக்கிறார். நான்காவது அத்தியாயமான ‘மார்கழி’ என்கிற சீரிஸை அக்‌ஷய் சுந்தர் இயக்கி உள்ளார். ஐந்தாவது அத்தியாயமான ‘பறவை கூட்டில் வாழும் மான்கள்’ என்பதை பாரதிராஜா இயக்கி இருக்கிறார். ஆறாவது அத்தியாயமான ‘நினைவோ ஒரு பறவை’ என்பதை தியாகராஜன் குமாரராஜா இயக்கியுள்ளார்.

இந்த ஆந்தாலஜி வெப் தொடருக்கு ஜிவி பிரகாஷ், யுவன் சங்கர் ராஜா, ஷான் ரோல்டன், இளையராஜா ஆகிய 4 இசையமைப்பாளர்கள் இசையமைத்து உள்ளனர். இந்த வெப் தொடர் காதலை மையமாக வைத்து உருவாக்கப்பட்டு உள்ளது. இதன் டிரைலர் வெளியாகி வைரலாகி வருகிறது.

Modern Love Chennai - Official Trailer | Prime Video India

Related Video