watch : மிரள வைக்கும் டாம் குரூஸின் ‘மிஷன் இம்பாசிபிள் - டெட் ரெகானிங் பாகம் 1’ டிரைலர் இதோ

டாம் குரூஸ் நடிப்பில் உருவாகியுள்ள  ‘மிஷன் இம்பாசிபிள் - டெட் ரெகானிங் பாகம் 1’ படத்தின் மாஸான ஆக்‌ஷன் காட்சிகளுடன் கூடிய டிரைலர் வெளியாகி உள்ளது.

First Published May 18, 2023, 3:28 PM IST | Last Updated May 18, 2023, 3:28 PM IST

ஹாலிவுட் படங்களில் ஆக்‌ஷன் காட்சிகளால் அதகளம் செய்பவர் டாம் குரூஸ். இவருக்கு தற்போது 60 வயது ஆகிறது. இந்த வயதிலும் செம்ம ஃபிட்டாக இருக்கும் அவர், தொடர்ந்து ஹாலிவுட் படங்களில் ரிஸ்க் எடுத்து நடித்து வருகிறார். அந்த வகையில் அவர் நடிப்பில் தற்போது உருவாகி உள்ள திரைப்படம் மிஷன் இம்பாசிபிள் - டெட் ரெகானிங் பாகம் 1. இப்படத்தின் டிரைலர் தற்போது வெளியாகி சமூக வலைதளங்களில் சக்கைப்போடு போட்டு வருகிறது. 

நெஞ்சைப் பதற வைக்கும் ஆக்‌ஷன் காட்சிகளில் டாம் குரூஸ் அசால்டாக நடித்துள்ளதை பார்த்து ரசிகர்கள் வாயடைத்துப் போய் உள்ளனர். இந்த டிரைலர் ரசிகர்களை கவர்ந்துள்ளதோடு, படத்தின் மீதான எதிர்பார்ப்பையும் அதிகரித்துள்ளது. மிஷன் இம்பாசிபிள் - டெட் ரெகானிங் பாகம் 1 திரைப்படம் வருகிற ஜூலை மாதம் 14-ந் தேதி உலகமெங்கும் பிரம்மாண்டமாக ரிலீஸ் ஆக உள்ளது.

Video Top Stories