ஜெயிலர் பட நாயகி மிர்னா நடிப்பில்... இன்டென்ஸ் த்ரில்லராக உருவாகியுள்ள 'பர்த் மார்க்'! ட்ரைலர் வெளியானது!

இயக்குனர் விக்ரம் ஸ்ரீதரன் இயக்கத்தில் உருவாகியுள்ள இன்டென்ஸ் திரில்லர் திரைப்படமான, பர்த் மார்க் திரைப்படத்தின், டிரைலர் தற்போது வெளியாகி உள்ளது.
 

Share this Video

இந்த படத்தில் சார்பட்டா திரைப்படத்தில் டான்சிங் ரோஸ் கதாபாத்திரத்தில் நடித்த சபீர் கதாநாயகனாக நடிக்க, ஜெயிலர் படத்தில் ரஜினியின் மருமகளாக நடித்த மிர்னா கதாநாயகியாக நடித்துள்ளார். கர்ப்பமாக இருக்கும் தன்னுடைய மனைவிக்கு பழங்கால முறையில், சுகப்பிரசவம் செய்வதற்காக கிராமம் ஒன்றுக்கு கதாநாயகன் அழைத்துச் செல்ல... அங்கு நடக்கும் மர்மமான விஷயங்கள் தான் இந்த திரைப்படத்தின் கதை. அதில் இருந்து எப்படி கதாநாயகி மீண்டு வருகிறாள் என்பதை பரபரப்பான காட்சிகளுடன் இயக்கியுள்ளார் இயக்குனர்.

யாரும் யூகிக்க முடியாத கதையம்சத்தில், உருவாக்கி உள்ள இப்படம் பிப்ரவரி 23ஆம் தேதி வெளியாக உள்ளது. இந்நிலையில் இந்த படத்தின் ட்ரைலர் தற்போது வெளியாகி படம் மீதான எதிர்பார்ப்பை தூண்டி உள்ளது.விஷால் சந்திரசேகர் இசையமைக்க, ராமு தங்கவேல் இந்த படத்திற்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். இனியவன் பாண்டியன் படத்தொகுப்பு செய்துள்ளார். இப்படத்தின் ட்ரைலர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

Related Video