எப்போதுமே ஒரு பயம் இருக்கும்! 'மழை பிடிக்காத மனிதன்' டீசரில் இடம்பெற்ற இளையராஜா பாடல்..!

விஜய் ஆன்டனி நடிப்பில் உருவாகியுள்ள 'மழை பிடிக்காத மனிதன்' படத்தின் டீசர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
 

Share this Video

இன்ஃபினிட்டி ஃபிலிம் வென்சர் தயாரிப்பில் விஜய் மில்டன் இயக்கத்தில், விஜய் ஆண்டனி, சரத்குமார், சத்யராஜ் மற்றும் பலர் நடித்துள்ள ‘மழை பிடிக்காத மனிதன்’ படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

இந்த டீசரின் ஆரம்பத்திலேயே... ’சில உயிர்கள் அர்ப்பமானவை என்னும் எண்ணமே உலகின் அனைத்து தீமைக்குமான விதை ’ என்ற டைட்டில் கார்டுடன் ஆரம்பமாகிறது. இதை தொடர்ந்து ’எப்போதுமே ஒரு பயம் இருக்கும், ஆனால் இப்ப அது இல்லை, கோவிலுக்கு போய் தூங்குனா நிம்மதியா இருக்கும் இல்ல, கண்ணுக்கு தெரியாத ஒருத்தன் எப்பவுமே கூட இருக்கிற மாதிரி ஒரு தைரியம், அதை கொடுத்தது நீங்கதான், நீங்க தானே’ என்று மேகா நாயகி ஆகாஷ் பேசும் வசனங்கள் படம் மீதான ஆர்வத்தை தூண்டும் விதத்தில் உள்ளது.

குறிப்பாக இளையராஜா இசையில், 'அவள் அப்படிதான்' படத்தில் இடம்பெற்ற ஏசுதாஸ் பாடிய உறவுகள் தொடர்கதை பாடல் இடம்பெற்றுள்ளது. ஏற்கனவே சில படங்களில் இளையராஜா அனுமதி இன்றி தன்னுடைய பாடலை பயன்படுத்தியதாக பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இந்த படத்திற்கும் அப்படி ஏதாவது பிரச்சனை வருமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Related Video