Margazhi Thingal: பள்ளிப்பருவ காதல் கைகூடுமா? உன்னதமான உணர்வோடு வெளியான 'மார்கழி திங்கள்' டீசர்!

இயக்குனர் பாரதி ராஜாவின் மகன், மனோஜ் பாரதிராஜா இயக்குனராக அறிமுகமாகியுள்ள 'மார்கழி திங்கள்' படத்தின் டீசர் தற்போது வெளியாகியுள்ளது.
 

Share this Video

இயக்குநர் சுசீந்திரனின் வெண்ணிலா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில், உருவாகி உள்ள 'மார்கழி திங்கள்' திரைப்படம் ஒரு உன்னதமான பள்ளி பருவ காதலை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ளது என்பது இந்த படத்தின் டீசரை பார்க்கும் போதே தெரிகிறது. மேலும் இப்படம் 90ஸ் கிட்ஸின் காதல் கதையை நினைவு படுத்தும் விதத்தில் உள்ளது என இந்த டீசருக்கு பலர் தங்களுடைய கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

இதுவரை ஒரு நடிகராக தமிழ் ரசிகர்கள் மத்தியில் பார்க்கப்படும், மனோஜ் பாரதிராஜா இந்த படத்தின் மூலம் ஒரு இயக்குனராக தன்னுடைய திறமையை வெளிப்படுத்தியுள்ளார். புதுமுகங்கள் ஹீரோ - ஹீரோயினாக நடித்துள்ள இந்த படத்தில், ஒரு கதாபாத்திரத்தில் 'இயக்குநர் இமயம்' பாரதிராஜா நடித்துள்ளார். தற்போது இந்த படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. மேலும் இப்படத்தின் டீசரை இயக்குனர் மணிரத்னம் வெளியிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Video