நீ அகதியா? தீவிரவாதியா? விஜய் சேதுபதி நடித்துள்ள யாதும் ஊரே யாவரும் கேளீர்' ட்ரைலர் வெளியானது!

விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகி நீண்ட நாட்களாக, வெளியாகாமல் இருக்கும் 'யாதும் ஊரே யாவரும் கேளீர்' படத்தின் டிரைலர் தற்போது வெளியாகி உள்ளது.
 

First Published May 15, 2023, 7:15 PM IST | Last Updated May 15, 2023, 7:15 PM IST

மறைந்த இயக்குனர் எஸ் பி ஜனநாதனின், துணை இயக்குனர், வெங்கட கிருஷ்ணா ரோகாந்த் 
இயக்குனராக அறிமுகமாகியுள்ள திரைப்படம், யாதும் ஊரே யாவரும் கேளீர்'.  விஜய் சேதுபதி ஹீரோவாக நடித்துள்ள இந்த திரைப்படத்தின் படபிடிப்பு கடந்த 2019 ஆம் ஆண்டு, ஜூன் மாதம் துவங்கப்பட்ட நிலையில், தமிழகத்தில் பல்வேறு இடங்களிலும், இலங்கையிலும் பெருவாரியான காட்சிகள் படமாக்கப்பட்டது.

அனைத்து பணிகளும் முடிவடைந்த பின்னரும், ஒரு சில காரணங்களால் இப்படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிக்கொண்டே சென்றது. ஒருவழியாக, கடந்த மாதம்... இப்படம் மே மாதம் 19 ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என பட குழு அறிவித்தது. இந்நிலையில் தற்போது இந்த படத்தின் டீசர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுவருகிறது.

அகதிகளின் பிரச்சினை குறித்து இப்படம் பேசி இருப்பது ட்ரைலரை பார்க்கும்போது தெரிகிறது. இந்த படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடிகை மேகா ஆகாஷ் நடித்துள்ளார். அஜித்தின் விடாமுயற்சி படத்தை இயக்க உள்ள இயக்குனர் மகிழ் திருமேனி இப்படத்தில் வில்லனாக நடித்துள்ளார். முக்கிய கதாபாத்திரத்தில் பிரபல இயக்குனர் மோகன் ராஜா, கரு பழனியப்பன், விவேக், கனிகா, உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். 

Video Top Stories