சொல்லாதது உண்மை! நிஜத்தில் சந்தித்த பிரச்னையை படமாக்கிய லட்சுமி ராமகிருஷ்ணன்! 'ஆர் யூ ஓகே பேபி' ட்ரைலர் இதோ!

இயக்குனரும், நடிகையுமான லட்சுமி ராமகிருஷ்ணன் இயக்கத்தில் உருவாக்கியுள்ள 'ஆர் யூ ஓகே பேபி' படத்தின் டிரைலர் தற்போது வெளியாகியுள்ளது.
 

First Published Sep 15, 2023, 6:41 PM IST | Last Updated Sep 15, 2023, 6:41 PM IST

லட்சுமி ராமகிருஷ்ணன் கடந்த சில வருடங்களுக்கு முன்பு, தனியார் தொலைக்காட்சியில் தொகுத்து வழங்கி வந்த, 'சொல்வதெல்லாம் உண்மை' என்கிற நிகழ்ச்சியில், சந்தித்த உண்மை சம்பவத்தை மையமாக வைத்து 'ஆர் யூ ஓகே பேபி' படத்தை இயக்கியுள்ளதாக கூறப்படுகிறது.

ஒரு குழந்தைக்காக இரண்டு தாய்மார்கள் உரிமை கோரும் கதையை அடிப்படையாக வைத்து இப்படம் உருவாகியுள்ளது என்பது இப்படத்தின் டிரைலரை பார்க்கும் போதே தெரிகிறது. இந்த படத்தில் நடிகை அபிராமி, சமுத்திரகனி, ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். தற்போது இந்த படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

Video Top Stories