பொண்ணா அடக்கமா எல்லாம் இருக்க முடியாது! கீர்த்தி சுரேஷ் நடிப்பில் உருவாகியுள்ள 'ரகு தாத்தா' ட்ரைலர் வெளியானது!

நடிகை கீர்த்தி சுரேஷ் நடித்துள்ள 'ரகு தாத்தா' திரைப்படத்தின் டிரைலர் வெளியாகி படம் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்கச் செய்துள்ளது.
 

Share this Video

தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகையாக இருக்கும் நடிகை கீர்த்தி சுரேஷ், கதையின் நாயகியாக நடிக்கும் படங்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து வருகிறார். அந்த வகையில் இவர் நடித்துள்ள 'ரகு தாத்தா' திரைப்படம் ஆகஸ்ட் 15ஆம் தேதி வெளியாக உள்ள நிலையில், இந்த படத்தின் டிரைலரை படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது.

இயக்குனர் சுமன் குமார் எழுதி - இயக்கியுள்ள 'ரகு தாத்தா' திரைப்படத்தை கே ஜி எஃப், சலார், போன்ற திரைப்படங்களை இயக்கிய ஹாம்பலோ ஃபிலிம்ஸ் தயாரித்துள்ளது. ஷான் ரோல்டன் இசையமைத்துள்ள இந்த திரைப்படம், ஹிந்தி திணிப்புக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதத்தில் எடுக்கப்பட்டுள்ளது. தற்போது இந்த படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த படத்தில் கீர்த்தி சுரேஷுடன் எம் எஸ் பாஸ்கர், தேவதர்ஷினி உள்ளிட்ட ஏராளமான பிரபலங்கள் நடித்துள்ளனர்.

Related Video