Mangai: எல்லாத்தையும் முடிச்சிக்கவா? கயல் ஆனந்தியின் மிரட்டலான நடிப்பில்.. வெளியானது 'மங்கை' பட ட்ரைலர்!

கயல் ஆனந்தி மிகவும் போல்டான கதாபாத்திரத்தில் நடித்துள்ள, 'மங்கை' படத்தின் ட்ரைலர் வெளியாகியுள்ளது.
 

Share this Video

இயக்குனர் குபேந்திரன் காமாட்சி இயக்கத்தில், கயல் ஆனந்தி கதையின் நாயகியாக நடிக்கும் திரைப்படம் 'மங்கை'. இந்த படத்தை ஜே.எஸ்.எம். பிக்சர்ஸ் சார்பில், ஏ.ஆர்.ஜாபர் சாதிக் தயாரிக்கிறார். முக்கிய கதாபாத்திரத்தில் துஷி, ராம்ஸ், ஆதித்யா கதிர், பிக்பாஸ் ஷிவின் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள்.

ஒரு பெண்ணின் பயணத்தை பற்றியும், பெண்களை ஆண்கள் எப்படி பார்க்கிறார்கள் என்கிற பார்வை பற்றியும் எடுக்கப்பட்டுள்ளது. முகம் சுழிக்காத வகையில்... நடைமுறை வாழ்க்கையில் உள்ள பல விஷயங்களை கட்டவிழ்த்துள்ளார் இயக்குனர். மீடியம் பட்ஜெட்டில் எடுக்கப்பட்டுள்ள இந்த படம், மார்ச் மாதம் ரிலீசாக உள்ள நிலையில், இந்த படத்தின் ட்ரைலர் தற்போது வெளியாகியுள்ளது.

Related Video