Merry Christmas trailer: கேத்தரினா கைஃப் - விஜய் சேதுபதி நடிப்பில் வெளியானது 'மெரி கிறிஸ்துமஸ்' டிரைலர்!

கேத்தரினா கைஃப் மற்றும் விஜய் சேதுபதி பிரதான வேடங்களில் நடித்திருக்கும் 'மெரி கிறிஸ்துமஸ்' திரைப்படம் ஹிந்தி மற்றும் தமிழ் ஆகிய மொழிகளில் தயாராகி  இருக்கிறது.
 

First Published Dec 20, 2023, 6:23 PM IST | Last Updated Dec 20, 2023, 6:23 PM IST

ரமேஷ், துரானி, சஞ்சய் ரவ்ட்ராய், ஜெயா துரானி, மற்றும் கேவல் கார்க் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கும் இப்படத்தை ஸ்ரீராம் ராகவன் இயக்கி இருக்கிறார். விநாயகர் பிரதிமா கண்ணன் மற்றும் டினு ஆனந்த் (நாயகன் புகழ்) ஆகியோர் இந்திப் பதிப்பில் நடித்து சிறப்பு சேர்த்திருக்கிறார்கள். இதேபோல் தமிழ்ப் பதிப்பில் ராதிகா சரத்குமார், சண்முகராஜா, கவின் ஜெபாபு மற்றும் ராஜேஷ் வில்லியம்ஸ் ஆகியோர் சிறப்பாக நடித்து தங்கள் பங்களிப்பை  செய்திருக்கிறார்கள். ராதிகா ஆப்தே மற்றும் அஸ்வின் கலாசேகர் ஆகியோர் இரண்டு பதிப்புகளிலும் தங்கள் முத்திரை பதிக்கும் வண்ணம் நடித்து இருக்கிறார்கள். 

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இப்படத்தின் டிரைலரை படக்குழுவினர் தற்போது வெளியிட்டுள்ளனர். இது ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்று சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

 

Video Top Stories