Watch : மாஃபியா இயக்குனரின் அடுத்த சம்பவம்... டிரெண்டாகும் ‘நிறங்கள் மூன்று’ டிரைலர்

கார்த்திக் நரேன் இயக்கத்தில் அதர்வா, சரத்குமார், ரகுமான் நடிப்பில் உருவாகி உள்ள நிறங்கள் மூன்று படத்தின் டிரைலர் வெளியாகி உள்ளது.

First Published Mar 4, 2023, 10:16 AM IST | Last Updated Mar 4, 2023, 10:16 AM IST

துருவங்கள் பதினாறு, மாஃபியா படத்தின் இயக்குனர் கார்த்திக் நரேன் இயக்கத்தில் தற்போது இயக்கியுள்ள திரைப்படம் நிறங்கள் மூன்று. அதர்வா, சரத்குமார், ரகுமான், அம்மு அபிராமி என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ள இப்படத்திற்கு ஜேக்ஸ் பிஜாய் இசையமைத்து உள்ளார். டிஜோ டோமி இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்துள்ளார்.

இந்நிலையில், நிறங்கள் மூன்று படத்தின் டிரைலரை படக்குழு வெளியிட்டு உள்ளது. சினிமா ஆசை கொண்ட ஒருவர், ஊழல் செய்யும் போலீஸ் அதிகாரி, மாணவர் என மூன்று வெவ்வேறு விதமான கதாபாத்திரங்களுடன் மூன்று வெவ்வேறு கதையுடன் விரியும் இந்த கதையை விறுவிறுப்பாக டிரைலரில் காட்டி உள்ளனர். 

ஒரே நாளில் நடக்கும்படியாக விறுவிறுப்பான திரைக்கதை உடன் கூடிய படமாக இதனை உருவாக்கி இருக்கிறார் கார்த்திக் நரேன். தற்போது வெளியாகி உள்ள இப்படத்தின் டிரைலர் யூடியூப்பில் டிரெண்டாகி வருகிறது. 

Video Top Stories