Asianet News TamilAsianet News Tamil

ஏய் எத்தனை குண்டு போட்டாலும் இந்த ஜப்பானை அழிக்க முடியாது டா! கார்த்தியின் 'ஜப்பான்' டீசர் இதோ..!

நடிகர் கார்த்தி தன்னுடைய 25-ஆவது திரைப்படமாக நடித்துள்ள 'ஜப்பான்' படத்தின் டீசர் வெளியாகி, ரசிகர்கள் மத்தியில் தாறுமாறான வரவேற்பை பெற்று வருகிறது.
 

First Published Oct 18, 2023, 7:03 PM IST | Last Updated Oct 18, 2023, 7:03 PM IST

பொன்னியின் செல்வன் படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்கு பின்னர்,  நடிகர் கார்த்தி நடித்து முடித்துள்ள திரைப்படம் தான் 'ஜப்பான்'. இந்த படத்தை இயக்குனர் ராஜு முருகன் இயக்கியுள்ள நிலையில், கார்த்திக்கு ஜோடியாக அனு இமானுவேல் நடித்துள்ளார். ஜிவி பிரகாஷ் குமார் இசையமைக்கும் இந்த படத்தை ட்ரீம் வாரியர் பிச்சர்ஸ் சார்பில், SR பிரபு தயாரித்துள்ளார்.

இந்த ஆண்டு தீபாவளிக்கு வெளியாக உள்ள இந்த படத்தின் புரோமோஷன் பணிகள் விரைவில் துவங்க உள்ள நிலையில், தற்போது இந்த படத்தின் டீசர் வெளியாகி படம் மீதான எதிர்பார்ப்பை தூண்டியுள்ளது. 

நகை கடையின் சுவற்றியில் ஓட்டையை போட்டு, 200 கோடி நகையை ஆடையை போடும் கார்த்தி, அதை வைத்து கொண்டு வெளிநாடுகளுக்கு சுற்றுலா சென்று பெண்கள், நகை, சரக்கு என ஜமாய்க்கிறார். ஒரு பக்கம் இவரை போலீஸ் வலைவீசி தேட, போலீசிடம் சிக்கும் 'ஜப்பான்' எப்படி போலீசுக்கே தண்ணி காட்டி விட்டு எஸ்கேப் ஆகிறார், இவர் ஏன் திருடுகிறார், இதன் பின்னணி என்ன, என்பதே இந்த படத்தின் கதைக்களமாக இருக்கும்  என யூகிக்க முடிகிறது. 

Video Top Stories