உலகநாயகன் உழைப்பு இப்போ பார்த்தாலும் சிலிர்க்க வைக்காதே.. 'ஆளவந்தான்' ரீ-ரிலீஸ் ட்ரைலர் வெளியானது!

உலகநாயகன் கமலஹாசன் நடிப்பில், 22 ஆண்டுகளுக்கு முன்பு வெளியான 'ஆளவந்தான்' திரைப்படம் டிசம்பர் 8-ம் தேதி வெளியாக உள்ள நிலையில், இந்த படத்தின் புதிய ட்ரெய்லர் வெளியாகி உள்ளது.
 

First Published Dec 2, 2023, 7:27 PM IST | Last Updated Dec 2, 2023, 7:27 PM IST

இயக்குனர் சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில், நடிகர் கமல்ஹாசன் இரட்டை வேடத்தில் நடித்து மிரட்டி இருந்த திரைப்படம் 'ஆளவந்தான்'.  இப்படம் கடந்த 2001 ஆம் ஆண்டு வெளியானது. இப்படத்தில் ரவீனா டான்டன் மற்றும் மனிஷா கொய்ராலா ஆகியோர் ஹீரோயின்களாக நடித்திருந்தனர். தயாரிப்பாளர் கலைப்புலி எஸ் தாணு தயாரித்திருந்தார். இந்த திரைப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பிற்கு மத்தியில் வெளியானாலும், கலவையான விமர்சனங்களை பெற்று அப்போது தோல்வியை தழுவியது.

திரையரங்கில் இப்படம் பிளாப் ஆனாலும், பின்னர் தொலைக்காட்சியில் போடப்பட்டபோது அதிகமான ரசிகர்களால் ரசிக்கப்பட்டது. குறிப்பாக இந்த படத்தில் கமலஹாசன் நடித்திருந்த நந்து கதாபாத்திரத்திற்காக மிகவும் கஷ்டப்பட்டு உடலை கட்டுக்கோப்பாக மாற்றி நடித்திருந்தார். சுமார் 22 ஆண்டுகளுக்கு பின்பு மீண்டும் ரீ ரிலீஸ் செய்ய இப்படத்தின் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ் தானு திட்டமிட்டுள்ளார். அதன்படி இப்படம் டிசம்பர் 8-ம் தேதி ரிலீஸ் ஆக உள்ளது. இந்த படத்தின் அறிவிப்பு வெளியானதில் இருந்தே, கமல்ஹாசனின் ரசிகர்கள் பலர் இப்படத்தை பார்க்க ஆர்வம் காட்டி வரும் நிலையில், தற்போது இந்த படத்தின் புதிய ட்ரைலர் ஒன்றையும் படக்குழு வெளியிட்டுள்ளது. அதில் கமலஹாசனின் அப்போதைய உழைப்பை இப்போது பார்த்தாலும் மெய்சிலிர்க்கிறது என ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

சமீபத்தில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகி முன்பு தோல்வி அடைந்த 'பாபா' திரைப்படம் மீண்டும் ரிலீஸ் செய்யப்பட்டபோது, ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று பாக்ஸ் ஆபிஸ் கலக்கியது. அதை போல் இந்த படமும் கலக்குமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Video Top Stories