Asianet News TamilAsianet News Tamil

எளிமைக்கு பெயர்போன அரசியல்வாதியின் கதை... முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட கக்கன் பட டிரைலர் இதோ

தமிழ்நாட்டில் எளிமைக்கு பெயர்போன அரசியல்வாதியாக திகழ்ந்த கக்கன் அவர்களின் வாழ்க்கையை மையமாக வைத்து உருவாகி இருக்கும் படத்தின் டிரைலரை முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்.

First Published Jul 25, 2023, 3:35 PM IST | Last Updated Jul 25, 2023, 3:35 PM IST

காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர் பி.கக்கன். இவர் தமிழ்நாடு பழைய மெட்ராஸ் ராஜ்தானியாக இருந்தபோதே அமைச்சராக பதவி வகித்தார். நேர்மைக்கும் எளிமைக்கும் பெயர்போன இவர் சுதந்திர போராட்ட வீரரும் கூட. பின்னர் அரசியலில் பணியாற்றி நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினராகவும் பணியாற்றி இருந்தார் கக்கன். இவர் கடந்த 1981-ம் ஆண்டு மரணமடைந்தார். அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றபோது இவர் உயிர் பிரிந்தது.

எளிமையின் சிகரமாக இருந்த கக்கனின் வாழ்க்கையை மையமாக வைத்து உருவாகி இருக்கும் திரைப்படம் தான் கக்கன். இப்படத்தை ரகோத் விஜய், பிரபு மாணிக்கம் ஆகியோர் இயக்கி உள்ளனர். இப்படத்திற்கு தேனிசை தென்றல் தேவா இசையமைத்து உள்ளார். இப்படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா இன்று நடைபெற்றது.

இதில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு கக்கன் பட டிரைலரை வெளியிட்டார். இந்த விழாவில் அமைச்சர் துரைமுருகன், தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி ஆகியோரும் கலந்துகொண்டனர். இப்படத்தில் கக்கனாக நடித்துள்ள ஜோசப் பேபி தான் இப்படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதி தயாரித்தும் உள்ளார்.

Video Top Stories