Watch : பேய் படத்தில்... காமெடி போலீஸ் ஆக காஜல் அகர்வால் - வைரலாகும் கோஸ்டி டிரைலர்

கல்யாண் இயக்கத்தில் காஜல் அகர்வால், யோகிபாபு, கே.எஸ்.ரவிக்குமார் நடிப்பில் உருவாகி உள்ள கோஸ்டி திரைப்படத்தின் டிரைலர் வெளியாகி உள்ளது.

Share this Video

பிரபுதேவா நடித்த குலேபகாவலி, ஜோதிகாவின் ஜாக்பாட் போன்ற காமெடி திரைப்படங்களை இயக்கியவர் கல்யாண். இவர் இயக்கத்தில் தற்போது உருவாகி இருக்கும் திரைப்படம் கோஸ்டி. இப்படத்தில் நடிகை காஜல் அகர்வால் கதையின் நாயகியாக நடித்துள்ளார். மேலும் யோகிபாபு, கே.எஸ்.ரவிக்குமார், தேவதர்ஷினி, தங்கதுரை, மயில்சாமி என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே இப்படத்தில் நடித்துள்ளது.

காமெடி கதையம்சம் கொண்ட பேய் படமாக தயாராகி உள்ள இப்படத்தில் காமெடி போலீஸ் ஆக நடித்திருக்கிறார் காஜல் அகர்வால். சாம் சி.எஸ் இப்படத்திற்கு இசையமைத்து உள்ளார். இப்படம் வருகிற மார்ச் 17-ந் தேதி ரிலீஸ் ஆக உள்ள நிலையில், தற்போது இப்படத்தின் டிரைலர் ரிலீஸ் ஆகி உள்ளது. காமெடி காட்சிகள் நிறைந்துள்ள இந்த டிரைலர் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Related Video