Asianet News TamilAsianet News Tamil

லவ் டுடே பாணியில் வித்தியாசமான கதைகளத்தில் ஜீவா நடித்துள்ள ‘வரலாறு முக்கியம்’ படத்தின் டிரைலர் வெளியானது

சந்தோஷ் ராஜன் இயக்கத்தில் ஜீவா, காஷ்மிரா பர்தேசி, விடிவி கணேஷ், கே.எஸ்.ரவிக்குமார் ஆகியோர் நடித்துள்ள வரலாறு முக்கியம் படத்தின் டிரைலர் வெளியாகி உள்ளது.

First Published Nov 27, 2022, 12:59 PM IST | Last Updated Nov 27, 2022, 12:59 PM IST

சந்தோஷ் ராஜன் இயக்கத்தில் நடிகர் ஜீவா நடித்துள்ள படம் வரலாறு முக்கியம். இப்படத்தில் நடிகர் ஜீவாவுக்கு ஜோடியாக காஷ்மிரா பர்தேசி நடித்துள்ளார். இதுதவிர சரண்யா பொன்வண்ணன், கே.எஸ்.ரவிக்குமார், விடிவி கணேஷ், பிரக்யா நக்ரா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஷான் ரஹ்மான் இப்படத்திற்கு இசையமைத்து உள்ளார்.

சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு சக்தி சரவணன் ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்நிலயில் வரலாறு முக்கியம் படத்தின் டிரைலர் வெளியாகி சமூக வலைதளங்களில் செம்ம வைரல் ஆகி வருகிறது. முழுக்க முழுக்க காமெடி கதையம்சத்துடன் தயாராகி உள்ள இப்படம் வருகிற டிசம்பர் மாதம் திரைகாண உள்ளது.