Asianet News TamilAsianet News Tamil

ராகவா லாரன்ஸ் - எஸ்.ஜே.சூர்யா இணையும் ‘ஜிகர்தண்டா 2’ படத்தின் மிரட்டலான டீசர் இதோ

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ராகவா லாரன்ஸ் மற்றும் எஸ்.ஜே.சூர்யா நடிப்பில் உருவாகி வரும் ஜிகர்தண்டா 2 படத்தின் டீசர் வெளியாகி உள்ளது.

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் கடந்த 2014-ம் ஆண்டு ரிலீசான படம் ஜிகர்தண்டா. பாபி சிம்ஹா அசால்ட் சேதுவாக நடித்திருந்த இப்படம் பிளாக்பஸ்டர் ஹிட்டானதோடு மட்டுமின்றி இதற்கு இரண்டு தேசிய விருதுகளும் கிடைத்தன. தற்போது 8 ஆண்டுகளுக்கு பின் அப்படத்தின் இரண்டாம் பாகம் தயாராகி வருவதாக அறிவித்துள்ளார் கார்த்திக் சுப்புராஜ்.

இப்படத்தில் ராகவா லாரன்ஸ் நாயகனாக நடிக்கிறார். அதேபோல் வில்லனாக எஸ்.ஜே.சூர்யா நடிக்கும் இப்படத்தின் மாஸான டீசர் ஒன்றை வெளியிட்டுள்ளனர். சந்தோஷ் நாராயணன் இசையமைக்கும் இப்படத்திற்கு திருநாவுக்கரவு ஒளிப்பதிவு செய்கிறார். இப்படத்தை கார்த்திக் சுப்புராஜின் ஸ்டோன் பெஞ்ச் நிறுவனமும், பைவ் ஸ்டார் கதிரேசனும் இணைந்து தயாரிக்கின்றனர். இப்படத்தின் ஷூட்டிங் இன்று தொடங்கி உள்ளது.

Video Top Stories