அந்த 5 நிமிஷம் நம்ப கைல தான் இருக்கு! மிரட்டும் ஜெயம் ரவி.. மெர்சல் பண்ணும் கீர்த்தி சுரேஷ்! 'சைரன்' ட்ரைலர்!

ஜெயம் ரவி நடிப்பில் வருகின்ற பிப்ரவரி மாதம் 16ம் தேதி வெளியாகவுள்ள சைரன் படத்தின் ட்ரைலர் தற்போது வெளியாகியுள்ளது.
 

First Published Feb 7, 2024, 10:03 PM IST | Last Updated Feb 7, 2024, 10:04 PM IST

நடிகர் ஜெயம் ரவி நடிப்பில் பொன்னியின் செல்வன் படத்தின், வெற்றிக்கு பின் வெளியான அகிலன், மற்றும் இறைவன் ஆகிய படங்கள் அடுத்தடுத்து தோல்வியை சந்தித்த நிலையில், தற்போது நடித்து முடித்துள்ள திரைப்படம், 'சைரன்'. கிரைம் த்ரில்லர் பாணியில் எடுக்கப்பட்டுள்ள இந்த படத்தில், ஜெயம் ரவி  கொலைக்கு தண்டனை அனுபவிக்கும் நிலையில்... உண்மை கொலையாளியை கண்டு பிடிக்கும் போலீஸ் அதிகாரி கதாபாத்திரத்தில், கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார்.

விறுவிறுப்பான மற்றும் பரபரப்பான கதையம்சத்தில் உருவாகியுள்ள இந்த படத்தில், ஜெயம் ரவிக்கு ஜோடியாக நடிகை அனுபமா பரமேஸ்வரன் நடித்துள்ளார். ஒரு குழந்தைக்கு அப்பாவாக ஜெயம் ரவி இந்த படத்தில் இதுவரை நடித்திராத வித்தியாசமான கெட்டப்பில் நடித்துள்ளார். பிரபல இயக்குனர் அந்தோணி பாக்யராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள"சைரன்" படத்தின் ட்ரைலர் சற்றுமுன் வெளியான நிலையில், படத்தின் மீதான எதிர்பார்ப்பை தூண்டி உள்ளது குறிப்பிடத்தக்கது.

Video Top Stories