Mili Trailer: முகம் சிவந்து குளிரில் நடுங்கும் ஜான்வி கபூர்... 'மிலி' ட்ரைலர் வெளியானது..!

நடிகை ஜான்வி கபூர் நடித்துள்ள மிலி படத்தின் ட்ரைலர் தற்போது வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
 

Share this Video

பாலிவுட் திரையுலகில் தன்னுடைய அம்மாவை போலவே மிகவும் தனித்துவமான கதைகளை தேர்வு செய்து நடித்து வருகிறார் ஜான்வி கபூர். இந்நிலையில் இவர் கடந்த 2019 ஆம் ஆண்டு,மலையாளத்தில் இயக்குனர் முத்துக்குட்டி சேவியர் இயக்கத்தில் வெளியாகி சூப்பர் ஹிட் வெற்றி பெற்ற திரில்லர் பாடமாக 'ஹெலன்' படத்தின் ரீமேக்காக எடுக்கப்பட்டுள்ள 'மிலி' படத்தில் நடித்துள்ளார்.

இந்த படத்தையும் இயக்குனர் முத்துக்குட்டி சேவியர் தான் இயக்கியுள்ளார். இந்த படத்தில் முதல் முறையாக தன்னுடைய தந்தையின் தயாரிப்பில் ஜான்வி நடித்துள்ளார். இந்த படம் நவம்பர் 4 ஆம் தேதி வெளியாக உள்ள நிலையில், இந்த படத்தின் ட்ரைலர் தற்போது வெளியாகியுள்ளது. ஏற்கனவே இந்த படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

ஏற்கனவே தமிழில் ஹெலன் படத்தின் ரீமேக் 'அன்புக்கினியாள்' என்கிற பெயரில் வெளியாகியது. இதில் கீர்த்தி பாண்டியன் முதல் முறையாக தன்னுடைய தந்தை அருண் பாண்டியனுடன் நடித்திருந்தார். இப்படத்தை கோகுல் இயக்கி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Video