Asianet News TamilAsianet News Tamil

ரசிகர்களை மெர்சலாக்கிய ‘அவதார் 2’ படத்தின் புது டிரைலர் இதோ

ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் வருகிற டிசம்பர் 16-ந் தேதி ரிலீசாக உள்ள அவதார் 2 படத்தின் புது டிரைலர் வெளியாகி வைரலாகி வருகிறது.

First Published Nov 22, 2022, 10:44 AM IST | Last Updated Nov 22, 2022, 10:44 AM IST

ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் கடந்த 2009-ம் ஆண்டு வெளியான அவதார் திரைப்படம் உலகமெங்கும் ரிலீசாகி மாபெரும் வசூல் சாதனை நிகழ்த்தியது. தற்போது 13 ஆண்டுகள் கழித்து அப்படத்தின் 2-ம் பாகம் ரிலீசாக உள்ளது. இப்படம் வருகிற டிசம்பர் 16-ந் தேதி உலகமெங்கும் 3டி-யில் ரிலீசாக உள்ளது.

இப்படத்தின் ரிலீசுக்கு இன்னும் ஒரு மாதமே எஞ்சியுள்ள நிலையில், இன்று முதல் அப்படத்தின் முன்பதிவு தொடங்கப்பட்டுள்ளதாக அறிவித்துள்ள படக்குழு, அத்துடன் அவதார் படத்தின் புதிய டிரைலர் ஒன்றையும் வெளியிட்டு உள்ளது. 

2 நிமிடங்கள் ஓடக்கூடிய இந்த டிரைலர் ரசிகர்களை மெர்சலாக்கி உள்ளது. அதில் வரும் பிரம்மிப்பூட்டும் காட்சிகள் படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் அதிகரிக்க செய்யும் வண்ணம் உள்ளதாக நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Video Top Stories