Asianet News TamilAsianet News Tamil

Watch : குறட்டைவிட்ட நாயகனை விரட்டிவிட்ட நாயகி - கவனம் பெறும் ‘குட் நைட்’ பட டீசர்

விநாயக் சந்திரசேகரன் நடிப்பில் ஜெய்பீம் மணிகண்டன் நாயகனாக நடித்துள்ள குட் நைட் படத்தின் டீசர் வெளியாகி வைரலாகி வருகிறது.

First Published Apr 14, 2023, 5:37 PM IST | Last Updated Apr 14, 2023, 5:37 PM IST

ஜெய்பீம் மணிகண்டன் நாயகனாக நடித்துள்ள திரைப்படம் குட் நைட். இப்படத்தை விநாயக் சந்திரசேகரன் என்கிற புதுமுக இயக்குனர் இயக்கி உள்ளார். இப்படத்தில் மணிகண்டனுக்கு ஜோடியாக முதல் நீ முடிவும் நீ படத்தின் நாயகி மீதா ரகுநாத் நடித்துள்ளார். இப்படத்தின் ஷான் ரோல்டன் இசையமைத்து உள்ளார். இதில் ரமேஷ் திலக், பகவதி பெருமாள், பாலாஜி சக்திவேல் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

இந்நிலையில், குட் நைட் திரைப்படத்தின் டீசர் இன்று வெளியாகி உள்ளது. இப்படத்தின் டீசரை நடிகர் ஜெயம் ரவி தான் வெளியிட்டு உள்ளார். குறட்டையை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ளது இப்படாம். இதன் டீசரும் வித்தியாசமாக உள்ளதால் யூடியூப்பில் டிரெண்டாகி வருவதோடு சோசியல் மீடியாவில் கவனம் பெற்று வருகிறது. இப்படம் மே மாதம் ரிலீசாகும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Video Top Stories