மெர்சலான ஆக்‌ஷன் காட்சிகளுடன் மாஸ் காட்டும் ‘ஜான் விக் - 4’ படத்தின் டிரைலர் இதோ

ஜான் விக் படத்தின் மூன்று பாகங்களுக்கு அமோக வரவேற்பு கிடைத்த நிலையில், தற்போது 4-ம் பாகத்தின் டிரைலருடன் அப்படத்தின் ரிலீஸ் தேதியும் வெளியாகி உள்ளது.

Share this Video

ஹாலிவுட் படங்களுக்கு இந்தியாவில் எப்போதுமே ஒரு தனி மவுசு உண்டு. இதனால் பெரும்பாலான ஹாலிவுட் படங்கள் இந்தியாவில் உள்ள அனைத்து மொழிகளிலும் டப்பிங் செய்யப்பட்டு வெளியிடப்படுகின்றன. அந்த வகையில் ஜான் விக் பட வரிசைகளும் ரசிகர்களை கவர்ந்த படங்களுள் ஒன்று. இதுவரை வெளியாகிய அப்படத்தின் மூன்று பாகங்களும் பிரம்மாண்ட வரவேற்பை பெற்றன.

தற்போது ஜான் விக் படத்தின் நான்காம் பாகம் தயாராகி உள்ளது. சாட் ஸ்டெஹெல்ஸ்கி இயக்கியுள்ள இப்படத்தில் டோனி என், கினு ஈவ்ஸ், ஸ்காட் அட்கின்ஸ் ஆகியோர் நடிப்பில் பிரம்மாண்டமாக தயாராகி உள்ள இப்படத்தின் டிரைலர் வெளியாகி சமூக வலைதளங்களில் செம்ம வைரல் ஆகி வருகிறது. 

அதிரடி ஆக்‌ஷன் காட்சிகளுடன் கூடிய இந்த டிரைலருக்கு அமோக வரவேற்பு கிடைத்து வருகிறது. பிரம்மிப்பூட்டும் காட்சிகள் அடங்கிய இந்த டிரைலரின் இறுதியில் இப்படத்தின் ரிலீஸ் தேதியும் அறிவிக்கப்பட்டு உள்ளது. அதன்படி ஜான் விக் படத்தின் 4-ம் பாகம் வருகிற 2023-ம் ஆண்டு மார்ச் மாதம் 24-ந் தேதி உலகமெங்கும் ரிலீஸ் ஆகும் என குறிப்பிட்டுள்ளனர்.

Related Video