நான் என்ன தப்பு பண்ணுனேன்? எமோஷ்னல் ரோலர் கோஸ்டாராக.. வெளியான ஹிப் ஹாப் ஆதி நடித்துள்ள PT சார் ட்ரைலர்!

இயக்குனர் கார்த்திக் வேணுகோபால் இயக்கத்தில், ஐசரி கணேஷ் தயாரிப்பில் உருவாக்கியுள்ள பிடி சார் படத்தின் டிரைலர் தற்போது வெளியாகியுள்ளது.
 

Share this Video

இயக்குனர் கார்த்திக் வேணுகோபாலன் இயக்கத்தில், ஹிப் ஹாப் ஆதி ஹீரோவாக நடித்துள்ள பிடி சார் திரைப்படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

சமீப காலமாக இசையமைப்பாளர்கள் அடுத்தடுத்து நடிகர்களாக மாறி வருகின்றனர். அந்த வகையில் இசையமைப்பாளராக இருந்து ஹீரோவாக அவதாரம் எடுத்தவர் ஹிப் ஹாப் தமிழா ஆதி. இவர் கடைசியாக நடித்த சூப்பர் ஹீரோ படமான 'வீரன்' ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றதை தொடர்ந்து தற்போது PT சார் என்கிற படத்தில் நடித்துள்ளார்.

இந்த படத்தை இயக்குனர் ஐசரி கணேஷ் தயாரித்துள்ளார். இந்த படத்தில் நடித்தது மட்டுமின்றி இப்படத்திற்கு இசையும் அமைத்துள்ளார் ஹிப் ஹாப் தமிழா ஆதி. மாதேஷ் மாணிக்கம் ஒளிப்பதிவு செய்ய, பிரசன்னா ஜிகே படத்தொகுப்பு செய்துள்ளார். அனைவரையும் சிரிக்க வைக்கும் அளவுக்கு காமெடி, காதல், எமோஷன் என அனைத்தும் கலந்த கலவையாக இப்படம் உருவாக்கி உள்ளது. இந்த படத்தில் ஹிப் ஹாப் ஆதிக்கு ஜோடியாக காஷ்மீரா பரதேசி நடித்துள்ளார். மேலும் அனிகா சுரேந்திரன் முக்கிய ரோலில் நடித்துள்ளார்.

 பள்ளிகளின் மாணவிகளுக்கு பள்ளியில் நடக்கும் பாலியல் சீண்டல்கள் குறித்தும், அதன் பின்னர் அந்த மாணவி அனுபவிக்கும் வலி வேதனைகளை விளக்கும் விதமாக இப்படம் உருவாகியுள்ளது என்பது டீசரை பார்த்தாலே தெரிகிறது. இப்படத்தின் ட்ரைலரை தொடர்ந்து ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என தெரிகிறது.

Related Video