Gandhari Trailer: இது நான் காவல் காக்குற இடம்.! திகிலூட்டும் ஹன்சிகாவின் 'காந்தாரி' பட ட்ரைலர் வெளியானது!

நடிகை ஹன்சிகா மாறுபட்ட வேடத்தில் மிரட்டியுள்ள, காந்தாரி படத்தின் ட்ரைலர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
 

Share this Video

திருமணத்திற்கு பின்னரும் தொடர்ந்து வித்தியாசமான வேடங்களை தேர்வு செய்து நடித்து வரும் ஹன்சிகா மோத்வானி தற்போது நடித்துள்ள திரைப்படம் 'காந்தாரி'. இயக்குனர் கண்ணன் என்பவர் எழுதி இயக்கி உள்ள இந்த படத்தில், அரண்மனை படத்தை தொடர்ந்து மீண்டும் திகிலூட்டும் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

மேலும் இந்த படத்தில் பிரிகிடா, மெட்ரோ சிரிஷ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த மாதம் ரிலீஸ் ஆகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போது இந்த படத்தின் ரிலீஸ் தேதியே அறிவிக்கப்படாமல் இப்படத்தின் ட்ரைலர் வெளியாகியுள்ளது. இந்த படத்தின் இயக்குனர் கண்ணன் தான் 'காந்தாரியை' தயாரித்துள்ளார். முழுவதும் டயலாக் இல்லாமல்... கடைசியில் ஹன்சிகா, தெலுங்கில் இது நான் காவல்காக்குற இடம். இங்க யாருக்கும் அனுமதி இல்லை என பேசுகிறார். பிளாக் மேக்கப்பில் வந்து ஹன்சிகா மிரட்டியுள்ள இந்த படத்தின் ட்ரைலர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

Related Video