விஜய் சேதுபதி சம்பளமே வாங்காமல் நடித்த ‘அழகிய கண்ணே’ திரைப்படத்தின் டிரைலர் இதோ

லியோனியின் மகன் லியோ சிவக்குமார் நாயகனாக அறிமுகமாகும் அழகிய கண்ணே திரைப்படத்தில் நடிகர் விஜய் சேதுபதி கெஸ்ட் ரோலில் நடித்துள்ளார்.

Share this Video

பட்டிமன்ற பேச்சாளர் திண்டுக்கல் லியோனியின் மகன் லியோ சிவக்குமார் நாயகனாக அறிமுகமாகி உள்ள திரைப்படம் அழகிய கண்ணே. ஆர்.விஜயக்குமார் இயக்கியுள்ள இப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடிகை சஞ்சிதா ஷெட்டி நடித்துள்ளார். நடிகர் விஜய் நடிப்பில் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட் ஆன மாஸ்டர் படத்தை தயாரித்த சேவியர் பிரிட்டோ தான் அழகிய கண்ணே திரைப்படத்தையும் தயாரித்துள்ளார்.

இப்படத்தில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதியும் கெஸ்ட் ரோலில் நடித்துள்ளார். இப்படத்திற்காக அவர் சம்பளமே வாங்காமல் நடித்து கொடுத்துள்ளார். அழகிய கண்ணே திரைப்படம் வருகிற ஜூன் 23-ந் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் ஆக உள்ளது. இந்நிலையில், அப்படத்தின் டிரைலரை படக்குழு வெளியிட்டு உள்ளது.

Related Video