விக்ரமின் 'துருவ நட்சத்திரம்' படத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ்..! அனல் பறக்கும் ஆக்ஷன்... வெளியானது ட்ரைலர்!

விக்ரம் விக்ரம் - கெளதம் மேனன் கூட்டணியில் உருவாகியுள்ள துருவ நட்சத்திரம் படத்தின் ட்ரைலர் வெளியானது.
 

First Published Oct 24, 2023, 7:00 PM IST | Last Updated Oct 24, 2023, 7:00 PM IST

இயக்குனர் கௌதம் மேனன் இயக்கத்தில், சூர்யா நடிப்பில் உருவாக இருந்த திரைப்படம் 'துருவ நட்சத்திரம்'. பின்னர், ஒரு சில காரணங்களால் சூர்யா துருவ நட்சத்திரம் படத்தில் இருந்து விலகிய பின்னர் விக்ரம் இப்படத்தின் உள்ளே வந்தார். இதைத்தொடர்ந்து, இந்த படத்தின் 70 சதவீத படப்பிடிப்பு 2017 ஆம் ஆண்டு எடுத்து முடிக்கப்பட்ட நிலையில் முழுமையாக எடுத்து முடிக்கப்படாமல் அப்படியே கிடப்பில் போடப்பட்டது.

இதைத்தொடர்ந்து கௌதம் மேனன் அடுத்தடுத்த படங்கள் இயக்குவதிலும், நடிப்பதிலும் பிஸியானார். சமீபத்தில் மீண்டும் துவங்கப்பட்ட இந்த படத்தின் படைப்பிடிப்பு, தற்போது முழுமையாக முடிவடைந்து, மீண்டும் ரிலீசுக்கு தயாராகியுள்ளது. இந்நிலையில், இந்த படத்தை நவம்பர் 24ஆம் தேதி வெளியிட படக்குழு  முடிவு செய்துள்ள நிலையில், இப்படத்தின் பிரமோஷன் பணிகளில் படக்குழு தீவிரமாக இறங்கி உள்ளது.

இதைத்தொடர்ந்து, துருவ நட்சத்திரம் படத்தின் டிரைலர் வெளியாகி இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்கச் செய்துள்ளது. விக்ரம் செம்ம மாஸான மற்றும் ஸ்டைலிஷான கெட்டப்பில் நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக ரித்து வர்மா நடித்துள்ளார். மேலும் இப்படம் 'விக்ரம்' படத்தில் காட்டப்பட்டது போலவே  சீக்ரெட் ஆபீசர்சை குறித்த கதைக்களத்தில் எடுக்கப்பட்டுள்ளது. 11 பேருடன் இயங்கும் சீக்ரெட் ஆபீஸர்ஸ் கேங்கின் கேப்டன் தான் சீயான் விக்ரம். விக்ரமின் இந்த அணிக்கு விக்ரம் சென்னை சூப்பர் கிங்ஸ் என பெயர் வைத்துள்ளது தான் செம ஹைலைட். இப்போது இந்த படத்தின் டிரைலர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
 

Video Top Stories