தொடர் தோல்வியில் இருந்துமீள ‘தில்லுக்கு துட்டு’ படத்தை மீண்டும் கையிலெடுத்த சந்தானம்- DD ரிட்டர்ன்ஸ் டீசர் இதோ

சந்தானம் நடிப்பில் வெளியான தில்லுக்கு துட்டு படத்தின் இரண்டு பாகங்களும் பிளாக்பஸ்டர் ஹிட் ஆன நிலையில், தற்போது அதன் மூன்றாம் பாகம் தயாராகி வருகிறது.

Share this Video

ராம் பாலா இயக்கத்தில் சந்தானம் நடித்த திரைப்படம் தில்லுக்கு துட்டு. இப்படத்தின் முதல்பாகம் கடந்த 2016-ம் ஆண்டு வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட் ஆனதை அடுத்து அதன் இரண்டாம் பாகத்தையும் எடுத்தனர். இதையும் ராம்பாலா இயக்க சந்தானம் நாயகனாக நடித்திருந்தார். இப்படம் கடந்த 2019-ம் ஆண்டு திரையரங்கில் ரிலீசாகி முதல் பாகத்தை விட அதிக வசூலையும் வாரிக்குவித்தது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

சந்தானம் நடிப்பில் கடைசியாக ரிலீஸ் ஆன ஹிட் படமும் இதுதான். இப்படத்துக்கு பின் அவர் நடித்த அனைத்துமே படு தோல்வியை சந்தித்தன. இதனால் மீண்டும் வெற்றிப்பாதைக்கு திரும்ப தில்லுக்கு துட்டு படத்தின் மூன்றாம் பாகத்தை கையில் எடுத்துள்ளார் சந்தானம்.

இப்படத்திற்கு டிடி ரிட்டர்ன்ஸ் என பெயரிட்டு உள்ளனர். இப்படத்தை புதுமுக இயக்குனர் எஸ்.பிரேம் குமார் இயக்குகிறார். இப்படத்தில் சந்தானம் நாயகனாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக சுரபி நடிக்க இப்படம் விறுவிறுப்பாக தயாராகி வருகிறது. தற்போது தமிழ் புத்தாண்டு தினமான இன்று டிடி ரிட்டர்ன்ஸ் படத்தின் டைட்டில் டீசரை வெளியிட்டுள்ளனர்.

Related Video