விடாமல் துரத்தும் பேய்! பக்... பக்... மனதை பதறவைக்கும் திகில் காட்சியுடன் வெளியான 'டிமான்ட்டி காலனி 2' ட்ரைலர்

'டிமான்ட்டி காலனி 2'  படத்தின் ட்ரைலர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
 

First Published Dec 16, 2023, 8:06 PM IST | Last Updated Dec 16, 2023, 8:06 PM IST

2015 ல் வெளியாகி ப்ளாக்பஸ்டர் வெற்றி பெற்ற இப்படத்தின் இரண்டாம்  'டிமான்ட்டி காலனி' படத்தின் 2-பாகம், 8 வருடங்களுக்குப் பிறகு 'டிமான்ட்டி காலனி 2'  என்ற பெயரில், இயக்குநர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில், நடிகர் அருள்நிதி நடிப்பில்  தயாராகி உள்ளது. 

முந்தின பாகத்தின் தொடர்ச்சியாக இப்படம் உருவாகியுள்ளது. டிமான்ட்டி காலனி படத்தின் சம்பவங்களுக்கு முன்பு நடந்த கதையும், அப்படத்தின் முடிவுக்கு பிறகு நடக்கும் சம்பவங்களும் சேர்த்து, இப்படத்தின் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது. முந்தின பாகத்தை விட பிரமாண்டமாகவும், பல சர்ப்ரைஸ் திருப்பங்களுடன் இப்படத்தை உருவாக்கியுள்ளார் இயக்குநர் அஜய் ஞானமுத்து. மிகப்பிரமாண்ட பொருட்செலவில், மிகச்சிறந்த தொழில்நுட்ப கலைஞர்களின் கைவண்ணத்தில்,  சிறப்பான VFX காட்சிகளுடன் இப்படம் உருவாகி வருகிறது. 

இப்படத்தில் நடிகர் அருள்நிதி, நடிகை பிரியா பவானி சங்கர்  முதன்மை பாத்திரத்தில் நடிக்க, இவர்களுடன் அருண்பாண்டியன், முத்துக்குமார், மீனாட்சி கோவிந்தராஜன், அர்ச்சனா ரவிசந்திரன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். தற்போது வெளியாகியுள்ள இப்படத்தின் ட்ரைலர் இதோ... 

Video Top Stories