கவுதம் மேனன் இயக்கத்தில்... காதலோடு ஆக்ஷனில் மிரட்டும் பிக்பாஸ் வருண்! ஜோசுவா இமைபோல் காக்க ட்ரைலர் இதோ!

இயக்குனர் கவுதம் வாசுதேவ் மேனன், இயக்கத்தில் வருண் ஹீரோவாக நடித்துள்ள ஜோசுவா இமைபோல் காக்க திரைப்படத்தின் ட்ரைலர் தற்போது வெளியாகியுள்ளது.
 

Share this Video

காதல் படங்களை இயக்குவதில் கை தேர்ந்த, இயக்குனர் கவுதம் மேனன்... பிக்பாஸ் வருணை ஹீரோவாக வைத்து இயக்கியுள்ள திரைப்படம் 'ஜோசுவா இமைபோல் காக்க' இதுவரை வருண் ஏற்று நடித்த கதாபாத்திரத்தை விட மிகவும் வித்தியாசமான கதாபாத்திரத்தில் இவரை நடிக்க வைத்துள்ளார். 

கதாபாத்திரத்துடன் ஒன்றி நடித்துள்ள வருண் இப்படத்தின் மூலம் ஒரு ஆக்ஷன் ஹீரோவாக அவதாரம் எடுத்துள்ளார். இந்த படத்தில், பிக்பாஸ் ஆரவ்-வின் மனைவி ராஹே ஹீரோயினாக நடித்துள்ளார். வில்லனாக நடிகர் கிருஷ்ணாவும், போலீஸ் அதிகாரியாக டிடியும் நடித்துள்ளனர். கார்த்திக் இசையமைத்துள்ள இப்படத்தை வேல்ஸ் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் சார்பில் ஐசரி கணேஷ் தயாரித்து உள்ளார். தற்போது இந்த படத்தின் டீசர் வெளியாகி உள்ளது. மேலும் இந்த படம், மார்ச் 1-ஆம் தேதி ரிலீசாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Video