பிக்பாஸ் சுருதி பெரியசாமி லெஸ்பியனாக நடித்துள்ள.. 'வாழ்வு தொடங்குமிடம் நீதானே' ட்ரைலர் வெளியானது!

Vaazhvu Thodangumidam Neethanae trailer : பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமான ஸ்ருதி பெரியசாமி, ஓரின சேர்க்கையாளராக நடித்துள்ள 'வாழ்வு தொடங்குமிடம்  நீதானே' என்கிற ஷார்ட் பிரிக்ஸ் படத்தின் டிரைலர் தற்போது வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

First Published Sep 22, 2023, 6:31 PM IST | Last Updated Sep 22, 2023, 7:02 PM IST

ஷார்ட் பிலிம் தளத்தில் செப்டம்பர் 28ஆம் தேதி முதல் ஒளிபரப்பாக உள்ள 'வாழ்வு தொடங்குமிடம் நீதானே' படம் வெளியாக உள்ளது. இதில்,  பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமான சுருதி பெரியசாமி மற்றும் நிரஞ்சனா நெய்தியர் ஆகியோர் கதையின் நாயகியாக, அதாவது லெஸ்பியன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இவர்களை தவிர, முக்கிய கதாபாத்திரத்தில் அசாத் பியர்ஸ், ஆறுமுகவேல், ஆர் ஜே பிரதீப், சங்கர் நிரஞ்சன், தஸ்மிகா, கண்ணன், மாறன் கார்த்திகேயன், போன்றோர் நடித்துள்ளனர்.

இந்த ஷார்ட் பிலிக்ஸ் படத்தை நடிகை நீலிமா இசை தயாரித்துள்ளார். இதனை ஜெயராஜ் பழனி என்பவர் இயக்கி உள்ளார். தர்ஷன் ரவிக்குமார் இசையில் உருவாகியுள்ள வாழ்வு தொடங்கும் இடம் நீதானே படத்திற்கு  கோகுல கிருஷ்ணா என்பவர் ஒளிப்பதிவு செய்ய,விக்னேஷ் ஆர் எல் படத்தொகுப்பு செய்துள்ளார். 

சர்ச்சையான கதாபாத்திரத்தில் சுருதி பெரியசாமி நடித்துள்ள இந்த ஷார்ட் பிலிக்ஸ் படத்தின் ட்ரைலர் தற்போது வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

Video Top Stories