சரியான காம காட்டெரும சார் அவன்... டிரெண்டாகும் பிக்பாஸ் கவினின் ‘டாடா’ டிரைலர்

பிக்பாஸ் மூலம் பிரபலமான கவினும், பீஸ்ட் படத்தில் நடித்த அபர்ணா தாஸும் ஜோடியாக நடித்துள்ள டாடா படத்தின் டிரைலர் வெளியாகி வைரலாகி வருகிறது.

Share this Video

பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமான கவின் ஹீரோவாக நடித்துள்ள திரைப்படம் டாடா. கணேஷ் கே பாபு என்பவர் இயக்கியுள்ள இப்படத்தில் கவினுக்கு ஜோடியாக மலையாள நடிகை அபர்ணா தாஸ் நடித்து இருக்கிறார். இவர் ஏற்கனவே விஜய்யுடன் பீஸ்ட் படத்தில் நடித்திருந்தாலும், தமிழில் ஹீரோயினாக நடிக்கும் முதல் படம் இதுவாகும்.

டாடா திரைப்படம் வருகிற பிப்ரவரி 10-ந் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் ஆக உள்ளது. இப்படத்தை ரெட் ஜெயண்ட் மூவீஸ் நிறுவனம் தான் வெளியிடுகிறது. இப்படத்தின் ரிலீசுக்கு இன்னும் சில தினங்களே உள்ள நிலையில், டாடா படம் குறித்த அப்டேட்டுகளும் அடுத்தடுத்து வெளிவந்த வண்ணம் உள்ளன.

அந்த வகையில் தற்போது டாடா படத்தின் டிரைலர் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. லவ் டுடே பாணியில் இந்த படமும் இளைஞர்களை கவரும் வகையில் எடுக்கப்பட்டுள்ளது டிரைலர் மூலமே தெரிகிறது. லவ் டுடே போல் இப்படம் சக்சஸ் ஆகுமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

Related Video