watch : முதன்முறையாக பாராதிராஜா உடன் இணைந்து சம்பவம் செய்யும் அருள்நிதி - மிரள வைக்கும் திருவின் குரல் டிரைலர்

ஹரிஷ் பிரபு இயக்கத்தில் பாரதிராஜா, அருள்நிதி, ஆத்மிகா நடிப்பில் உருவாகி இருக்கும் திருவின் குரல் படத்தின் டிரைலர் ரிலீஸ் ஆகி உள்ளது.

First Published Apr 3, 2023, 3:32 PM IST | Last Updated Apr 3, 2023, 3:32 PM IST

ஹரிஷ் பிரபு இயக்கத்தில் அருள்நிதி நடித்துள்ள திரைப்படம் திருவின் குரல். இப்படத்தில் அருள்நிதிக்கு ஜோடியாக நடிகை ஆத்மிகா நடித்துள்ளார். மேலும் பாரதிராஜாவும் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். லைகா நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு சாம் சி.எஸ். இசையமைத்து உள்ளார். இப்படத்திற்கான பாடல் வரிகளை வைரமுத்து எழுதி உள்ளார்.

இந்நிலையில், திருவின் குரல் படத்தின் டிரைலரை படக்குழு இன்று வெளியிட்டுள்ளது. இந்த டிரைலரை பார்க்கும்போது இப்படத்தில் நடிகர் அருள்நிதி வாய்ப்பேச முடியாத மாற்றுத்திறனாளி இளைஞராக நடித்துள்ளது தெரிகிறது. ரத்தம் தெறிக்க தெறிக்க ஆக்‌ஷன் காட்சிகள் நிறைந்துள்ள இந்த டிரைலர் வைரலாகி வருகிறது. இப்படம் வருகிற ஏப்ரல் 14-ந் தேதி தமிழ் புத்தாண்டிற்கு ரிலீஸ் ஆக உள்ளது.

Video Top Stories