இது டெரரான காதலா இருக்கே...! வைரலாகும் பரத் - வாணி போஜன் ‘லவ்’ பட டீசர்

ஆர்.பி.பாலா இயக்கத்தில் பரத், வாணி போஜன், விவேக் பிரசன்னா, ராதா ரவி நடிப்பில் உருவாகி இருக்கும் லவ் திரைப்படத்தின் டீசர் வெளியாகி உள்ளது.

Share this Video

நடிகர் படத் - நடிகை வாணி போஜன் கூட்டணியில் கடந்த மாதம் வெளியான மிரள் படம் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், த்ற்போது அந்த கூட்டணி மீண்டும் ஜோடியாக நடித்துள்ள படம் லவ். ஆர்.பி.பாலா இயக்கியிருக்கும் இப்படத்தில் விவேக் பிரசன்னா, ராதா ரவி, பிக்பாஸ் டேனியல் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். ரோனி ரஃபேல் இசையமைத்துள்ள இப்படத்திற்கு பிஜி முத்தையா ஒளிப்பதிவு செய்துள்ளார். அஜய் மனோஜ் படத்தொகுப்பு பணிகளை மேற்கொண்டுள்ளார்.

இப்படத்தின் டீசர் தற்போது வெளியாகி உள்ளது. இந்த டீசரை ரியல் காதல் ஜோடிகளான ஆர்யாவும், சாயிஷாவும் இணைந்து வெளியிட்டனர். இப்படத்தின் லவ் என ரொமாண்டிக் தலைப்பு இருந்தாலும் படம் செம்ம டெரராக இருக்கும் என்பது டீசர் மூலம் தெரிகிறது. கொலையை செய்துவிட்டு அதை மறைக்க பரத் போராடுவதை விறுவிறுப்புடன் டீசரில் காட்டி உள்ளனர். வித்தியாசமாக உள்ள இந்த டீசர் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Related Video