இன்னைய தேதிக்கு இவன்தான் சார் சூப்பர் ஸ்டார்! பாலா இயக்கத்தில் அருண் விஜய் நடித்துள்ள 'வணங்கான்' ட்ரைலர்!

Vanangaan Trailer: இயக்குனர் பாலா இயக்கத்தில் அருண் விஜய் முதல் முறையாக நடித்துள்ள 'வணங்கான்' படத்தின் ட்ரைலர் தற்போது வெளியாகி படம் மீதான எதிர்பார்ப்பை தூண்டியுள்ளது.
 

Share this Video

சூர்யாவை வைத்து இயக்குனர் பாலா, எடுக்க நினைத்த படம் தான் 'வணங்கான்'. இந்த படத்தை நடிகர் சூர்யாவே தயாரிக்க முடிவு செய்த நிலையில் படத்தின் ஷூட்டிங் பணிகள் துவங்கி பரபரப்பாக நடந்து வந்த போது, சூர்யா - பாலா இடையே ஏற்பட்ட மனக்கசப்பு காரணமாக இந்த படம் ட்ராப் ஆனதாக கூறப்பட்டது. ஆனால் சூர்யா மற்றும் பாலா தரப்பில் இருந்து பிரச்னையை மறைத்து விட்டு, சூர்யா இப்படத்திற்கு செட் ஆகாததால் வேறு ஒரு நடிகரை வைத்து இப்படத்தை இயக்க உள்ளதாக பாலீஷாக கூறினார் பாலா.

சூர்யா வெளியேறிய பின்னர் இந்த படத்தின் உள்ளே வந்தவர் தான், நடிகர் அருண் விஜய். இந்த படத்திற்காக பல நாட்கள் வெயிலில் காய்ந்து, பல அடிகள் பட்டு ஒருவழியாக நடித்து முடித்தார். ஜூலை 12-ஆம் தேதி இப்படம் வெளியாக உள்ள நிலையில், தற்போது இப்படத்தின் ட்ரைலர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

Related Video