watch : ஆர்யா கிராமத்து நாயகனாக மிரட்டும் ‘காதர்பாட்சா என்ற முத்துராமலிங்கம்’ படத்தின் மாஸ் டீசர் இதோ

முத்தையா இயக்கத்தில் ஆர்யா கிராமத்து நாயகனாக மிரட்டி இருக்கும் ‘காதர்பாட்சா என்ற முத்துராமலிங்கம்’ படத்தின் டீசர் வெளியாகி உள்ளது.

Share this Video

கொம்பன், மருது, விருமன் போன்ற பிளாக்பஸ்டர் ஹிட் படங்களை கொடுத்தவர் முத்தையா. குறிப்பாக கிராமத்து கதையம்சம் கொண்ட படங்களை இயக்குவதில் கைதேர்ந்தவரான இவர் தற்போது காதர்பாட்சா என்ற முத்துராமலிங்கம் படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தில் நடிகர் ஆர்யா கதாநாயகனாக நடித்துள்ளார். இப்படத்தில் ஆர்யாவுக்கு ஜோடியாக வெந்து தணிந்தது காடு படத்தின் ஹீரோயின் சித்தி இத்னானி நடித்துள்ளார்.

காதர்பாட்சா என்ற முத்துராமலிங்கம் படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்து உள்ளார். இப்படத்திற்கு வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்துள்ளார். கிராமத்து கதையம்சம் கொண்ட படமாக தயாராகி வரும் இப்படத்தை ஜீ ஸ்டூடியோஸ் மற்றும் டிரஸ்டிக் புரொடக்‌ஷன்ஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்து வருகின்றன.

இந்நிலையில், காதர்பாட்சா என்ற முத்துராமலிங்கம் படத்தின் மாஸான டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது. ஆக்‌ஷன் காட்சிகள் நிறைந்த இந்த டீசரில் பக்கா கிராமத்து நாயகனாக ஆர்யா வலம் வருகிறார். இந்த டீசரைப் பார்க்கும் போது லைட்டாக கொம்பன் பட சாயலில் இருப்பதாக நெட்டிசன்கள் ஒப்பிட்டு வருகின்றனர்.

Related Video