watch : ஹாலிவுட் தரத்தில் இருக்கும் அருண் விஜய்யின் ‘அச்சம் என்பது இல்லையே' மிஷன்-1 படத்தின் மெர்சலான டிரைலர்

ஏ.எல்.விஜய் இயக்கத்தில் அருண் விஜய், எமி ஜாக்சன் நடிப்பில் உருவாகி இருக்கும் அச்சம் என்பது இல்லையே படத்தின் டீசர் வெளியாகி உள்ளது.

First Published Apr 6, 2023, 7:40 AM IST | Last Updated Apr 6, 2023, 7:40 AM IST

இயக்குனர் ஏ.எல். விஜய் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி உள்ள திரைப்படம் ‘அச்சம் என்பது இல்லையே' மிஷன் சாப்டர் 1. அருண் விஜய் நாயகனாக நடித்துள்ள இப்படத்தில் எமி ஜாக்சனும், மலையாள நடிகை நிமிஷா சஜயனும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். லைகா நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்து உள்ளார்.

இப்படத்தை முழுக்க முழுக்க லண்டனில் படமாக்கி உள்ளனர். ஹாலிவுட் ரேஞ்சுக்கு மிரட்டலான ஆக்‌ஷன் காட்சிகள் உடன் தயாராகி உள்ள இப்படத்தின் டீசரை படக்குழு வெளியிட்டு உள்ளது. இதில் அருண் விஜய்யை மிஞ்சும் அளவுக்கு ஆக்‌ஷன் காட்சிகளில் அதகளம் செய்திருக்கிறார் எமி ஜாக்சன். இதைப் பார்க்கும் போது ஹாலிவுட் படம் பார்ப்பது போல் இருப்பதாக ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.

Video Top Stories