லண்டனில் பிரம்மாண்டமாக உருவாகும் ‘அச்சம் என்பது இல்லையே’ - அருண் விஜய் - ஏ.எல்.விஜய் இணையும் மாஸ் பட டீசர் இதோ

ஏ.எல்.விஜய் இயக்கத்தில் அருண் விஜய், எமி ஜாக்சன், நிமிஷா சஜயன் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் ‘அச்சம் என்பது இல்லையே’ படத்தின் டீசர் வெளியாகி உள்ளது.

Share this Video

தமிழ் சினிமாவில் பிசியான நடிகராக வலம் வருபவர் அருண் விஜய். இவர் நடிப்பில் அண்மையில் வெளியான யானை மற்றும் சினம் ஆகிய படங்கள் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், தற்போது அவர் நடிக்கும் புதிய படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன்படி அவர் நடிக்கும் புதிய படத்திற்கு ‘அச்சம் என்பது இல்லையே’ என பெயரிடப்பட்டு உள்ளது.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

ஏ.எல்.விஜய் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகும் இப்படத்தில் அருண் விஜய்க்கு ஜோடியாக நடிகை எமி ஜாக்சன் நடித்து வருகிறார். ஜிவி பிரகாஷ் இப்படத்திற்கு இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது லண்டனின் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அப்படத்தின் அறிமுக டீசர் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

ஸ்ரீ ஷீரடி சாய் மூவீஸ் சார்பில் ராஜசேகர் மற்றும் சுவாதி ஆகியோர் இணைந்து தயாரிக்கும் இப்படத்தில் மலையாள நடிகை நிமிஷா சஜயனும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். அதிரடி ஆக்‌ஷன் படமாக இது தயாராகி வருகிறது. தற்போது வெளியாகி உள்ள டீசரில் அருண் விஜய் மற்றும் எமி ஜாக்‌ஷனின் ஸ்டைலிஷ் லுக்கும் இடம்பெற்று உள்ளது.

Related Video