Watch: கிராமத்து நாயகனாக அதகளம் செய்யும் அருள்நிதி.. வைரலாகும் ‘கழுவேத்தி மூர்க்கன்’ படத்தின் மாஸ் டிரைலர் இதோ

கெளதம ராஜ் இயக்கத்தில் அருள்நிதி, துஷாரா விஜயன் நடிப்பில் உருவாகி இருக்கும் கழுவேத்தி மூர்க்கன் படத்தின் டிரைலரை படக்குழு வெளியிட்டுள்ளது.

First Published May 19, 2023, 12:21 PM IST | Last Updated May 19, 2023, 12:21 PM IST

வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருபவர் அருள்நிதி. அவர் நடிப்பில் தற்போது உருவாகி உள்ள திரைப்படம் கழுவேத்தி மூர்க்கன். இப்படத்தை கெளதம ராஜ் இயக்கி உள்ளார். இவர் ஜோதிகா நடிப்பில் வெளிவந்த ராட்சசி படம் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் ஆவார். இப்படத்தில் அருள்நிதிக்கு ஜோடியாக சார்பட்டா பரம்பரை படத்தின் நாயகி துஷாரா விஜயன் நடித்துள்ளார்.

கழுவேத்தி மூர்க்கன் திரைப்படம் வருகிற மே 26-ந் தேதி திரையரங்குகளில் ரிலீஸ் ஆக உள்ளது. ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் தான் இப்படத்தை தமிழகத்தில் ரிலீஸ் செய்கிறது. கழுவேத்தி மூர்க்கன் படத்தின் ரிலீசுக்கு இன்னும் ஒரு வாரமே எஞ்சியுள்ள நிலையில், இன்று அப்படத்தின் டிரைலரை படக்குழு வெளியிட்டுள்ளது. அருள்நிதி கிராமத்து நாயகனாகவே மாறி ஆக்‌ஷனில் அதகளம் செய்யும் காட்சிகளுடன் கூடிய அந்த டிரைலர் வைரலாகி வருகிறது.

Video Top Stories