Demonte Colony 2: அது நம்பள பழி தீர்க்காம விடாது! மிரள வைக்கும் 'டிமான்டி காலனி 2' திரைப்படத்தின் ட்ரைலர்!

அஜய் ஞானமுத்து இயக்கத்தில் அருள்நிதி ஹீரோவாக நடித்துள்ள 'டிமான்டி காலனி 2' படத்தின் ட்ரைலர் தற்போது வெளியாகியுள்ளது.
 

First Published Jul 24, 2024, 5:46 PM IST | Last Updated Jul 24, 2024, 5:46 PM IST

அருள்நிதி நடிப்பில், கடந்த 2015-ஆம் ஆண்டு வெளியான 'டிமான்டி காலனி' திரைப்படத்தின் வெற்றியை  தொடர்ந்து, 'டிமான்டி காலனி 2' திரைப்படம் உருவாகி உள்ளது.  ஆகஸ்ட் 15ஆம் தேதி வெளியாக உள்ள இந்த படத்தின் ட்ரைலர் தற்போது வெளியாகியுள்ளது.

இயக்குனர் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்திலும், நடிகர் அருள்நிதி ஹீரோவாக நடிக்க, பிரியா பவானி சங்கர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். மேலும் அருண் பாண்டியன், மீனாட்சி கோவிந்தராஜன், சஞ்சனோ கார்லிக், அர்ச்சனா ரவிச்சந்திரன், உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

இந்த படத்தை பாபி பாலச்சந்திரன், விஜயசுப்பிரமணியன், ஆர் சி ரவிக்குமார், ஆகியோர் ஒயிட் நைட் என்டர்டெயின்மெண்ட் சார்பில் தயாரித்துள்ளனர். மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் உருவாக்கியுள்ள இந்த படத்திற்கு, சாம் சி.எஸ். இசையமைக்க, ஹரி கண்ணன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.  குமரேஷ் இப்படத்திற்கு படத்தொகுப்பு செய்துள்ளார். டிமான்டி காலனியை விட்டு மீண்டும் வெளியே வந்த செயின் எப்படி உள்ளே போகிறது என்பதை மையமாக வைத்து இரண்டாம் பாகம் உருவாகியுள்ளது.

Video Top Stories